மேலும் செய்திகள்
பாரதி வீதியில் பாரபட்சமாக ஆக்கிரமிப்பு அகற்றம்
20-Feb-2025
புதுச்சேரி: சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அதிகாரிகள் அத்துமீறுவதாக கூறி நகர பகுதியில் கடை அடைப்பு போராட்டம் நடந்தது.புதுச்சேரியில் சாலையோர பிளாட்பாரத்தை ஆக்கிரமித்து கடை கட்டி வாடகை விடுகின்றனர். சிலர் சாலையில் பல அடி துாரத்திற்கு இரும்பு ஷிட்களால் கடை அமைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் நகர வீதிகளில் வாகனத்தில் செல்ல முடியாமல் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். மாவட்டம் நிர்வாகம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. புதுச்சேரி நகராட்சி, பொதுப்பணித்துறை இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறது.கடந்த 19ம் தேதி பாரதி வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. அப்போது, பிளாட்பாரத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த படிகட்டுகள், மேற்கூரைகள், கடைகளை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாத்தில் ஈடுப்பட்டனர்.ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் அதிகாரிகள் அத்துமீறி செயல்படுவதாக கூறி நகர பகுதி வியாபாரிகள் சில அமைப்புகளுடன் சேர்ந்து நேற்று கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். அதன்படி, நகர பகுதியில் உள்ள நேரு வீதி, கொசக்கடை வீதி, பாரதி வீதி, சின்ன சுப்ராயப்பிள்ளை வீதி உள்ளிட்ட நகர பகுதி கடைகள் மட்டும் கடை அடைப்பு போராட்டம் நடத்தியது. சாலையோர வியாபாரிகளும் இதில் பங்கேற்றனர். பெரிய மார்க்கெட், மீன் மார்க்கெட் வழக்கம் போல் இயங்கியது.
20-Feb-2025