மேலும் செய்திகள்
திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
21-Jul-2026
புதுச்சேரி: புதுச்சேரி மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில், பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நேற்று நடந்தது. லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையத்தில் நடந்த முகாமிற்கு ஆணைய உறுப்பினர் ஜெகநாதன் வரவேற்றார். அமைச்சர் சிவக்கொழுந்து கலந்து கொண்டு பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். புதுச்சேரி சட்டப்பணிகள் ஆணைய செயலாளர் ரமேஷ், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சிவராமன், பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் மோகன்குமார், இணை இயக்குநர் சிவகாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். வழக்கறிஞர் ரவி பெண் குழந்தைகளுக்கான போக்சோ சட்டம் குறித்தும், மாவட்ட குழந்தை பாதுகாப்புக்குழு அலுவலர் பானுமதி, குழந்தைகள் உரிமைகள், குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், குழந்தை தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் குறித்து பயிற்சியளித்தனர். ஆணைய உறுப்பினர்கள் கோமுகி, முருகசாமி நன்றி கூறினர்.
21-Jul-2026