இந்திய திபெத் நட்புறவு கழகத்தின் தென்னிந்திய மேற்பார்வையாளர் தேர்வு
புதுச்சேரி : டெல்லியில் நடந்த திபெத் நாட்டு திருவிழாவில், புதுச்சேரியைச் சேர்ந்த சமூக சேவகர் ஆதவன், இந்திய திபெத் நட்புறவு கழகத்தின் தென்னிந்திய மேற்பார்வையாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்தியா - திபெத் நட்புறவு கழகம், மற்றும் மத்திய திபெத் நிர்வாகம் சார்பில் அகில இந்திய அளவிலான தேசிய செயற்குழு கூட்டம் மற்றும் திபெத் நாட்டின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் திருவிழா, டில்லியில் உள்ள இந்தியா இன்டர்நேஷனல் மையத்தில் உள்ள தலாய்லாமா கருத்தரங்க கூடத்தில் மூன்று நாட்கள் நடந்தது.அகில இந்திய தலைவர் கிர்மி தலைமை தாங்கினார். திபெத் நாட்டின் ஒருங்கிணைப்பாளர் தாஷிதேகி வரவேற்றார். திபெத்தின் சிக்யாராங் பென்பா டெசிரிங், பீகாரைச் சேர்ந்த சுரேந்திர குமார், கர்நாடகாவின் மாநிலத் தலைவர் அர்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திபெத் மற்றும் இந்தியா இடேயே 1914ம் ஆண்டிலிருந்து, இன்று வரை தொடரும் கலாசார நட்புறவு குறித்து எழுத்தாளர் குளோத் ஆர்பி பேசினார்.இந்திய திபெத் நட்புறவு கழகத்தின் தென்னிந்திய மேற்பார்வையாளராக புதுச்சேரி மாநிலத்தின் தலைவர் ஆதவன் தேர்வு செய்யப்பட்டார். திபெத்தின் நக்வார் ஜோடன், மிக்மார்தஷாம்சே ஆகியோர் அகில இந்திய அளவில் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.