உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுற்றுச்சுவர் அமைக்க சபாநாயகர் ஆலோசனை

சுற்றுச்சுவர் அமைக்க சபாநாயகர் ஆலோசனை

அரியாங்குப்பம் : தவளக்குப்பம் ராஜிவ்காந்தி அரசு கலைக்கல்லுாரியில் சுற்றுச்சுவர், சாலை அமைப்பது தொடர்பாக, சபாநாயகர் செல்வம் அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தினார்.மணவெளி தொகுதி தவளக்குப்பத்தில், ராஜிவ்காந்தி அரசு கலைக்கல்லுாரி, அதன் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. ஒரே வளாகத்தில், இயங்கி வரும், கல்லுாரி, பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் இடிந்து, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. சாலை வசதிகள் இல்லாமல் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.சுற்றுச்சுவர், சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடக்க உள்ளது. பணிகள் நடப்பது தொடர்பாக, சபாநாயகர் செல்வம் நேற்று கல்லுாரி வளாகத்தில் அதிகாரிகளுடன் ஆலோனை நடத்தி ஆய்வு செய்தார். பள்ளி மற்றும் கல்லுாரி நிர்வாகத்திற்கு இடையூறு இல்லாத வகையில் பணிகளை மேற்கொள்ள சபாநாயகர், அதிகாரிகளிடம் கூறினார்.கல்லுாரி முதல்வர் ஹன்னா மோனிஷா, பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் விக்டோரியா, பள்ளி துணை முதல்வர், குலால் இளநிலைப் பொறியாளர் அகிலன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை