உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வர்த்தக உரிமம் சிறப்பு முகாம் வரும் 25ம் தேதி துவங்குகிறது

வர்த்தக உரிமம் சிறப்பு முகாம் வரும் 25ம் தேதி துவங்குகிறது

புதுச்சேரி : உழவர்கரை நகராட்சி சார்பில், வர்த்தக உரிமம் தொடர்பாக, 3 நாட்கள் சிறப்பு முகாம் நடக்க உள்ளதாக, ஆணையர் சுரேஷ்ராஜ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வியாபாரம் செய்பவர்கள் நகராட்சியின் வர்த்தக உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஆய்வின் போது, பல வர்த்தக மற்றும் வியாபார நிறுவனங்கள், உரிமம் பெறாமல், சிலர் உரிமத்தை புதுப்பிக்காமல் வியாபாரம் செய்து வருவது தெரிய வந்துள்ளது.உரிமம் மற்றும் உரிமத்தை புதுப்பிக்க தொடர்பாக, சிறப்பு முகாம் நடக்க உள்ளது. வரும் 25ம் தேதி, காந்தி நகர், தொழிலாளர் துறை அருகில், 26ம் தேதி காலாப்பட்டு சமுதாய நலக்கூடம், 27ம் தேதி, மூலக்குளம் உழவர்கரை சமுதாய நலக்கூடம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது. வரும் 28ம் தேதிக்குள், வர்த்தக உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும். தவறினால், 25 சதவீத அபராத தொகை செலுத்த நேரிடும். உரிமம் இல்லாமல் செயல்படும் வர்த்த நிறுவனங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ