மேலும் செய்திகள்
தேசிய ஹாக்கி போட்டிக்கு பள்ளி மாணவர்கள் தேர்வு
22-Aug-2024
மதுரையில் சுதந்திர தின விழா கோலாகலம்
16-Aug-2024
வில்லியனுார்: தொண்டமாநத்தம் அன்சாரி துரைசாமி அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது. பள்ளி பொறுப்பாசிரியர் மனோன்மணி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை சிவசங்கரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற உடற்கல்வி விரிவுரையாளர் நடராஜன், தொண்டமாநத்தம் கோவில் அறங்காவலர் குழு தலைவர் மனோகரன், அரிமா தமிழன் மற்றும் பள்ளியின் முதுநிலை கண்காணிப்பாளர் வரதராஜூலு ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டினர்.விரிவுரையாளர்கள் மணிகண்டன், சரவணன், தமிழாசிரியை, கலைவாணி ஆகியோர் வாழ்த்தி பேசினர். வரலாற்று ஆசிரியர் உதயகுமார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை விரிவுரையாளர்கள் விஜயலட்சுமி, யமுனா, கவிதா, இயேசுராஜா, சைமன், ஜனார்த்தனன், ஜெகன், நாயகி, அனிதாமரி, அன்புமதி, மகாதேவன், ஆறுமுகம் மற்றும் திவாகர் ஆகியோர் செய்தனர். உடற்கல்வி விரிவுரையாளர் ரகு நன்றி கூறினார்.
22-Aug-2024
16-Aug-2024