உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விளையாட்டு வீரர்கள் நல சங்க ஆலோசனை கூட்டம்

விளையாட்டு வீரர்கள் நல சங்க ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்கள் நல சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது.சங்கத் தலைவர் வளவன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராஜ், ஆறுமுகம், பிரகாஷ், சதீஷ், அன்பு நிலவன், பாபு செல்வம், சுப்ரமணி, குமார் வெங்கடேஷ், பாபு, நாகராஜ் முன்னிலை வகித்தனர். விளையாட்டு சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் வரும் பட்ஜெட்டில் புதுச்சேரி மாநில விளையாட்டு துறைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். விளையாட்டு துறைக்கு தனி இயக்குனரை நியமிக்க அரசு முன்வர வேண்டும். பல்வேறு சர்வதேச மற்றும் தேசியப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு உடனடியாக பரிசுத்தொகை அரசு வழங்க வேண்டும். புதுச்சேரி மாநில விளையாட்டு கவுன்சில் தொடர்ந்து நடைபெற அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.இந்திய அரசின் விளையாட்டு சட்ட திட்டங்களை புதுச்சேரி மாநில ஒலிம்பிக் சங்கம் பின்பற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி விளையாட்டு வளர்ச்சி ஆணையத்தில் கொல்லைப்புறமாக ஆட்களை வேலையில் அமர்த்துவதற்கு எடுத்துள்ள முயற்சியை புதுச்சேரி கவர்னர் தலையிட்டு தடுத்து நிறுத்திட வேண்டும் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !