உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஸ்ரீமுஷ்ணம் சார் பதிவாளர் அலுவலகம் திறப்பு

ஸ்ரீமுஷ்ணம் சார் பதிவாளர் அலுவலகம் திறப்பு

ஸ்ரீமுஷ்ணம், : ஸ்ரீமுஷ்ணம் சார்பதிவாளர் அலுவலக திறப்பு விழாவில், பேரூராட்சி சேர்மன் செல்வி ஆனந்தன் குத்துவிளக்கேற்றினார்.ஸ்ரீமுஷ்ணத்தில் சார் பதிவாளர் அலுவலகம் 2 கோடி ரூபாய் செலவில் புதியதாக கட்டப்பட்டுள்ளது. புதிய அலுவலகத்தை கடலுாரில் இருந்து முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன் பின்னர் அலுவலக பணிகளை பேரூராட்சி சேர்மன் செல்விஆனந்தன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில் ஸ்ரீமுஷ்ணம் (பொறுப்பு) சார்பதிவாளர் கலைவாணி, பேரூராட்சி துணை சேர்மன் முத்தமிழரசி பார்த்திபன், அலுவலக பணியாளர்கள், பத்திர எழுத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி