உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவர் கோ-கோ போட்டி புனித அந்தோணி பள்ளி முதலிடம்

மாணவர் கோ-கோ போட்டி புனித அந்தோணி பள்ளி முதலிடம்

புதுச்சேரி,: புதுச்சேரியில் நடந்த, 14 வயதிற்கு உட்பட்ட மாணவர் பிரிவிலான கோ-கோ போட்டியில், புனித அந்தோணி பள்ளி முதலிடம் பிடித்தது.புதுச்சேரி அரசு பள்ளி கல்வித்துறை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம் சார்பாக, வட்டம்-1, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையிலான 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவ - மாணவிகளுக்கு, கோ-கோ விளையாட்டு போட்டி, உப்பளம் விளையாட்டு மைதானத்தில் நேற்று துவங்கியது. இதில், 14 வயதிற்கு உட்பட்ட மாணவர் பிரிவில், புதுச்சேரி, புனித அந்தோணி பள்ளி முதலிடம், மரப்பாலம், செவன்த்டே மேல்நிலைப் பள்ளி இரண்டாம் இடம், தேங்காய்த்திட்டு அரசு உயர்நிலைப்பள்ளி மூன்றாம் இடம், புனித அன்னாள் பள்ளி நான்காம் இடம் பிடித்தது.சிறுமியர் பிரிவில், அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம், இமாகுலேட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடம், வாசவி இண்டர்நேஷனல் பள்ளி மூன்றாம் இடம், அன்பாலயா மேல்நிலைப்பள்ளி நான்காம் இடம் பெற்றது.தொடர்ந்து, 17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கான போட்டி நடக்கிறது. இந்த போட்டியானது நாளை மறுநாள் நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை