உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவர்களின் நிகழ்ச்சி வானொலியில் ஒலிபரப்பு

மாணவர்களின் நிகழ்ச்சி வானொலியில் ஒலிபரப்பு

பாகூர்: பாகூர் அரசு நடுநிலை பள்ளி மாணவர்களின், பல்சுவை நிகழ்ச்சி வரும் 2ம் தேதி, புதுச்சேரி வானொலியில் ஒலிபரப்பாக உள்ளது.பாகூர் அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் திறன்களை வெளிப்டுத்திடும் வகையில் வாய்ப்பு வழங்கிட வேண்டும் என பள்ளி தலைமையாசிரியர் பழனிச்சாமி, புதுச்சேரி வானொலி நிலைய அதிகாரியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்பேரில், சுதந்தர தினத்தையொட்டி கடந்த 14ம் தேதி, புதுச்சேரி வானொலி நிலையத்தில், பாகூர் அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளி மாணவர்களின், பாட்டு, வினாடி - வினாடி, நாடகம், ஆங்கில உரையாடல் உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சி ஒலிப்பதிவு செய்யப்பட்டது.மாணவர்களின் பல்சுவை நிகழ்ச்சியை, தலைமையாசிரியர் பழனிச்சாமி, ஆசிரியர்கள் தம்பி ராஜலட்சுமி, மஞ்சு, ரம்யா ஆகியோர் வழிநடத்தினர். இந்நிகழ்ச்சி, வரும் 2ம் தேதி மாலை 5.15 மணிக்கு, புதுச்சேரி வானொலியில் ஒலிப்பரப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை