மேலும் செய்திகள்
மூதாட்டியை கடித்து கொன்றவருக்கு 'ஆயுள்'
10-Apr-2026
புதுச்சேரி: சாரதாம்பாள் கோவிலில் நடந்த சுவாமி சூர்தாசர் ஜெயந்தி விழாவில், பக்தர்கள் கலந்து கொண்டனர். புதுச்சேரி சஷம் அமைப்பு சார்பில், 7ம் ஆண்டு சுவாமி சூர்தாசர் ஜெயந்தி விழா, எல்லைப்பிள்ளைச்சாவடி சாரதாம்பாள் கோவிலில் நடந்தது. சஷம் அமைப்பின் பொறுப்பாளர் நாகராஜன், அருள், சிவசங்கரி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ராஜிவ்காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை முன்னாள் கண்காணிப்பாளர் ஜோதிபாபு, பேராசிரியர் உஷாராணி சிறப்புரை ஆற்றினர். துணை தலைவர் மணிகண்டன், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கினார். நிகழ்ச்சியில், வாய்ப்பாட்டு மற்றும் வீணை வாசித்த மாணவ, மாணவிகள் கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில், மணிகண்டன், சவரிராஜ், தெய்வசிகாமணி, ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
10-Apr-2026