மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற இளைஞர் சிறுகாவேரிப்பாக்கத்தில் கைது
14-Aug-2024
புதுச்சேரி: அரியூரில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் காலை ரோந்து பணியில் ஈடுபட்னர். அப்போது வாலிபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் ஓடினார். அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அவர் பள்ளித்தென்னல் கெங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராகுல் 22, என்பதும், இவர் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா மற்றும் அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். பின் அவர் மீது வழக்குப்பதிந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
14-Aug-2024