உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜவுளி வியாபாரி தற்கொலை 

ஜவுளி வியாபாரி தற்கொலை 

புதுச்சேரி: கடன் பிரச்னையால், பூச்சி மருந்து குடித்த ஜவுளிக்கடை உரிமையாளர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுச்சேரி லாஸ்பேட்டை நெசவாளர் நகரை சேர்ந்தவர் முருகவேல், 32; ஜவுளி கடை உரிமையாளர். இவரது மனைவி அனிதாமேரி, 32; இருவருக்கும் கடந்த 8 மாதத்திற்கு முன்பு திருமணமாகியது. அனிதாமேரி தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். முருகவேல் ஜவுளிக்கடை வியாபாரத்திற்காக கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டனர். இதனால் மன வேதனை அடைந்த முருகவேல், கடந்த மாதம் 27ம் தேதி, கொசக்கடை வீதியில் உள்ள தனது உறவினரின் ஜளிவுக்கடையில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயக்கமடைந்த அவரை, உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த முருகவேல் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகாரின்பேரில் பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை