உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்துறை அதிகாரிகள் போலீசார் ஆலோசனை

மின்துறை அதிகாரிகள் போலீசார் ஆலோசனை

காட்டேரிக்குப்பம்: காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்தில் போலீசார் - மின்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமை தாங்கினார்.மின்துறை உதவி பொறியாளர் ராதாகிருஷ்ணன், இளநிலை பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், அடிக்கடி மின்தடை ஏற்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழை காலத்திற்கு முன், உயர்மின்னழுத்த கம்பிகள் செல்லும் வழியில் உள்ள மரத்தின் கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும். மின்தடை தொடர்பான தகவல்களை தெரிவித்ததுடன், அதனை உடனே சரி செய்யும் வகையில் இரவு நேரங்களிலும் ஊழியர்களை பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் வலியுறுத்தினர்.இதற்கு, மின்துறை அதிகாரிகள் இனி மின்தடை ஏற்படாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் விரைந்து மேற்கொள்ளப்படும். இரவு நேரங்களில் ஊழியர்கள் நியமிக்கப்படுவர் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி