உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாடியில் இருந்து விழுந்த வாலிபர் சாவு

மாடியில் இருந்து விழுந்த வாலிபர் சாவு

புதுச்சேரி : மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்து மயிலாடுதுறை வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.மயிலாடுதுறை அடுத்த காளி பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் ஜான்சன்துரை, 29. இவர் புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார்.ஒரு வீட்டில் தங்கியிருந்து அவர், நேற்று முன்தினம் மொட்டை மாடியில் துாங்கிய போது, கீழே விழுந்தார். படு காயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர், சிசிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !