உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ‘தி யூனியன் ஆப் ஸ்டேட்ஸ்’ நுால் வெளியீட்டு விழா

‘தி யூனியன் ஆப் ஸ்டேட்ஸ்’ நுால் வெளியீட்டு விழா

புதுச்சேரி: தி யூனியன் ஆப் ஸ்டேட்ஸ் நுால் வெளியீட்டு விழா, புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்தது.  புதுச்சேரி நீதிமன்ற கருத்தரங்கு கூடத்தில் நேற்று நடந்த விழாவில், வழக்கறிஞர் ஷாமிலி ராஜ்குமார் வரவேற்றார். புதுச்சேரி தலைமை நீதிபதி ஆனந்த், புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ரமேஷ், அரசு செயலர் சந்திரன், அரசு தலைமை செயலர் சரத் சவுகான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். சென்னை ஐகோர்ட் மற்றும் புதுச்சேரிக்கான அரசு வழக்கறிஞர் நிர்மல்குமார் மோகன்தாஸ் எழுதிய தி யூனியன் ஆப் ஸ்டேட்ஸ் என்ற நுாலை சென்னை ஐகோர்ட்  நீதிபதி அனிதா சுமந்த் சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் வெளியிட்டார். அதனை ஐகோர்ட் நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முதல் பிரதியை பெற்றுக்கொண்டு, புதுச்சேரி தலைமை நீதிபதி ஆனந்திடம் நுாலை வழங்கினார். நிகழ்ச்சியில், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். வழக்கறிஞர் இந்துமதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ