உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மூச்சு திணறல் ஏற்பட்டு பெண் சாவு

மூச்சு திணறல் ஏற்பட்டு பெண் சாவு

புதுச்சேரி, : மூச்சு திணறல் ஏற்பட்டு பெண் இறந்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் தொம்னிக். இவர் இசை குழு நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயராணி. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.இதனிடையே கோரிமேடு பகுதியில், ஜெயந்தி, 38; என்ற பெண்ணுடன் தொம்னிக் குடும்பம் நடத்தி வந்தார். ஜெயந்திக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். புகாரின் பேரில், கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ