உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காப்புக்காட்டில் மர்ம தீ விருதை அருகே பரபரப்பு

காப்புக்காட்டில் மர்ம தீ விருதை அருகே பரபரப்பு

விருத்தாசலம், : விருத்தாசலம் அருகே காப்புக்காடு மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் - கருவேப்பிலங்குறிச்சி சாலையில், கருவேப்பிலங்குறிச்சி காப்புகாடு உள்ளது. இதில், மான், மயில், நரி, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.இந்நிலையில், அந்த காப்புக்காட்டில் நேற்று இரவு 8:00 மணியளவில் தீடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து சென்ற வனத்துறை அலுவலர் ரகுவரன் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் மற்றும் விருத்தாசலம் தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். இதனால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி