புதுச்சேரி : இளைஞர் காங்., கூட்டத்தில் அகில இந்திய காங்., செயலாளர் முன்னிலையில், நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி இளைஞர் காங்., கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு அகில இந்திய இளைஞர் காங்., செயலாளர் கிருஷ்ணா ஆல்வார் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., மாநில இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், மாநிலத்தில், காங்., கட்சி ஒற்றுமையாக இல்லாமல் இருக்கிறது. நிர்வாகிகளுக்கு மரியாதை கொடுக்காமல் இருக்கின்றனர். பா.ஜ., மாநிலத்தில் பல திட்டங்களை செய்து வருகிறது. காங்., கட்சியினர் ஒற்றுமையாக இல்லாமல் இருந்தால் வரும் தேர்தலில் காங்., புதுச்சேரியில் வெற்றி பெற முடியாது, உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தனர். இந்த கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகளை பேசும் போது, நிர்வாகிகளுக்கிடையே வாக்குவாதம் செய்ததால், கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, கட்சியில் உள்ள பல்வேறு பிரச்னைகளை கட்சி நிர்வாகிகள் முன்வைக்கும் போது, தேசிய இளைஞர் காங்., செயலாளர் சரி செய்வதாக, நிர்வாகிகளிடம் தெரிவித்தார். இளைஞர் காங், கூட்டத்தில் நிர்வாகிகளிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தால், கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.