உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிங்கப்பூரில் திருவள்ளுவர் சர்வதேச கலாசார மையம் பிரதமர் மோடிக்கு புதுச்சேரி பா.ஜ.,  நன்றி

சிங்கப்பூரில் திருவள்ளுவர் சர்வதேச கலாசார மையம் பிரதமர் மோடிக்கு புதுச்சேரி பா.ஜ.,  நன்றி

புதுச்சேரி : புதுச்சேரி பா.ஜ., மாநில சிறப்பு அழைப்பாளர் வீரராகவன் வெளியிட்டுள்ள அறிக்கை:ஆசிய நாடுகளான புரூனே, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அந்த பயணத்தின் முக்கிய அம்சமாக சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் சந்தித்து , சர்வதேச அளவில் முதல் கலாசார மையம் சிங்கப்பூரில் விரைவில் துவங்கப்படும் என, அறிவித்துள்ளார். இந்த திருவள்ளுவர் பெயரில் அமையும் சர்வதேச கலாசாரம் மையம் திருவள்ளுவரின் மாண்பினையும் புகழினையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கு வழிவகுக்கும். அண்மையில் இந்தியா வந்திருந்த மலேசிய பிரதமருடன் நடந்த சந்திப்பின் போது அந்த நாட்டில் திருவள்ளுவர் பெயரில் இருக்கை அமைப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அடுத்தபடியாக தற்போது திருவள்ளுவர் பெயரில் சர்வதேச கலாசார மையங்கள் அமைக்கப்பட உள்ளது.இது உலகளாவிய தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் வழங்குகிற மிகப்பெரிய அங்கீகாரம். திருவள்ளுவர் பெயரில் சர்வதேச அளவில் முதல் கலாசார மையத்தினை சிங்கப்பூரில் அமைவதற்கு நடவடிக்கை எடுத்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டுகளையும், நன்றியும் தெரிவித்து கொள்கிறோம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை