உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொது இடத்தில் ரகளை மூவர் கைது

பொது இடத்தில் ரகளை மூவர் கைது

பாகூர்; பாகூர் போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் இரவுரோந்து சென்றனர். அப்போது, ஆதிக்கப்பட்டு சந்திப்பில்,பின்னாச்சிக்குப்பத்தை சேர்ந்தவர் விக்னேஷ், 26; செல்வகணபதி, 22; ஆகியோர் மது போதையில் நின்றுகொண்டு, பொதுமக்களை ஆபாசமாக திட்டிக்கொண்டு, ரகளையில் ஈடுபட்டிருந்தனர். போலீசார், அவர்கள் மீது வழக்கு பதிந்து, கைது செய்தனர்.அதேபோல்,கிருமாம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, முள்ளோடையில் பொது மக்களை ஆபாசமாக திட்டி ரகளை செய்த, கடலூர் வண்டிபாளையத்தைச் சேர்ந்த அப்பு, 18; என்பவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி