உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தனியார் கம்பெனியில் திருடிய மூவர் கைது

தனியார் கம்பெனியில் திருடிய மூவர் கைது

வில்லியனுார்:  வில்லியனுார் அருகே தனியார் தொழிற்சாலையில் இரும்பு பைப்புகளை திருடிய மூவரை  போலீசார் கைது செய்தனர். வில்லியனுார் அடுத்த வடமங்கலம் கிராமத்தில் இயங்கி வரும் பிரபல தனியார் தொழிற்சாலையில் கடந்த 8ம் தேதி இரவு 12:00 மணியளவில் கம்பெனி பின்புரம் மர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்து உள்ளே இருந்த ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான இரும்பு பைப்புகளை திருடி செல்வது சி.சி.டி.வி., கேமாரவில் பதிவானது. கடந்த 10ம் தேதி இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கம்பெனி மேலாளர் நிக்கோலஸ்,  வில்லியனுார் போலீசில் புகார் தெரிவித்தார். சப் இன்ஸ்பெக்டர்  திருமுருகன் வழக்குப் பதிந்து விசாரித்தார். நேற்று முன்தினம் வடமங்கலம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். வடமங்கலம்  சாராயக்கடை  அருகே சந்தேகம் படும்படியாக மூன்று பேர் இரும்பு பைப்புகளை எடுத்துச் சென்றனர். அவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் கம்பெனியில் இருந்து இரும்பு பைப்புகளை திருடியது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர்கள் கண்டமங்கலம் பள்ளித்தென்னல் கிராமத்தை் சேர்ந்த சதீஷ், 30; விஜய், 30; மதிபாலன், 33, ஆகியோர் என தெரியவந்தது. மூவரையும் போலீசார் கைது செய்து, இரும்பு பைப்புகளை பறிமுதல் செய்தனர். அவர்களை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ