டி20 கிரிக்கெட் போட்டி டைகர்ஸ் அணி வெற்றி
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று நடந்த டி20 கிரிக்கெட் போட்டியில் புல்ஸ் அணியை வீழ்த்தி, டைகர்ஸ் அணி வெற்றி பெற்றது.கிரிக்கெட் அஸோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி மற்றும் டி.சி.எம் நிறுவனம் சார்பில் டி20 போட்டிகள் கடந்த 24ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதில் ஷார்க்ஸ், லயன்ஸ், புல்ஸ், டைகர்ஸ், பாந்தர்ஸ், மற்றும் டஸ்கர்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று(3ம் தேதி) நடந்த போட்டியில் டைகர்ஸ் அணியும், புல்ஸ் அணியும் மோதின. முதலில் ஆடிய டைகர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 206 ரன்கள் அடித்தது.தொடர்ந்து, ஆடிய புல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 143 ரன்கள் எடுத்தது. டைகர்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 53 ரன்கள் அடித்த டைகர்ஸ் அணியின் சைலேஷ் வைத்தியநாதன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.லீக் போட்டிகள் முடிவுற்ற நிலையில் இன்று (4ம் தேதி) முதல் நாக் அவுட் போட்டிகள் துவங்கியுள்ளன.இப்போட்டிகள் ஜூலை மாதம் துவங்கும் புதுச்சேரி பிரீமியர் லீக் 2025த்திற்கான முன்னோட்டமாகவும்,வரும் 9ம் தேதி நடக்கும் புதுச்சேரி பிரீமியர் லீக் 2ம் சுற்று ஏலத்தில், அணியின் உரிமையாளர்கள், இப்போட்டிகளின் அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்ய உள்ளதும் குறிப்பிடத்தக்கது.