உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக் மோதியதில் வியாபாரி பலி

பைக் மோதியதில் வியாபாரி பலி

புதுச்சேரி : புதுச்சேரி- கடலுார் சாலையை கடக்க முயன்ற மொபைல் விற்பனை கடை உரிமையாளர் பைக் மோதி இறந்தார். புதுச்சேரி, முருங்கப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன், 45; இவர் அதே பகுதியில் மொபைல் விற்பனை கடை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் 9:30 மணி அளவில் கடையிலிருந்து வெளியே வந்து, புதுச்சேரி- கடலுார் சாலையை நைனார்மண்டபம் பகுதியில் கடக்க முயன்று உள்ளார். அப்போது, புதுச்சேரி பகுதியில் இருந்து அதிக வேகமாக வந்த பைக் சீனிவாசன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. உடன் அருகில் இருந்தவர்ககள் சீனுவாசனை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் சீனிவாசன் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில் மேற்கு பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ