உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போக்குவரத்து விழிப்புணர்வு

போக்குவரத்து விழிப்புணர்வு

பாகூர்: பாகூரில் போக்குவரத்து விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் மவுன வீதி நாடகம் நடந்தது. புதுச்சேரி உளவியல் சங்கம், வில்லியனுார் கஸ்துாரிபா மகளிர் கலலுாரி சமூகப்பணித் துறை மற்றும் பாகூர் கஸ்துாரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு, செந்தில்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். கிருமாம்பாக்கம் போக்குவரத்து இன்ஸ்பெக்ர் தன்வந்திரி, பாகூர் சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், பள்ளி துணை முதல்வர் வில்சன், சமூகப்பணித் துறைத் தலைவர் அனுாப், புதுச்சேரி உளவியல் சங்க நிர்வாக குழு உறுப்பினர் அருண்பிரவின் ஆகியோர் மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினர். தொடர்ந்து, போக்குவரத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். இதில், 50க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று, போக்குவரத்து விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்ற பதாகைகளை ஏந்தி பாகூர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, கஸ்தூரிபா கல்லுாரி மாணவிகள் மவுன நாடகம் மூலம் போக்குவரத்து விபத்து மற்றும் அதை தவிர்க்கும் வழிமுறைகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி