உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலை விபத்தால் போக்குவரத்து பாதிப்பு

சாலை விபத்தால் போக்குவரத்து பாதிப்பு

பாகூர்: புதுச்சேரி - கடலுார் சாலையின் நடுவே கவிழ்ந்த டாட்டா ஏஸ் வாகனத்தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கடலுாரில் இருந்து புதுச்சேரி நோக்கி நேற்று காலை 8:00 மணி அளவில் டாட்டா ஏஸ் வாகனம் கட்டுமான பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்றது.புதுச்சேரி -- கடலுார் சாலை கந்தன்பேட் சந்திப்பு அருகே சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழுந்த வாகனம் தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ