உதயநிதியை கண்டித்து த.வெ.க., ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி: தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதுாறாக பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை கண்டித்து, புதுச்சேரி த.வெ.க., சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. அண்ணா சிலை அருகில், நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு எம்.எல்.ஏ.,க்கள் சாய்சரவணன்குமார், ராமு ஆகியோர் தலைமை தாங்கினர். பொதுச்செயலாளர் நரேஷ், முருகன், புதியவன், சசிபாலன், பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கட்சியினர் உதயநிதியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து, ஒதியஞ்சாலை போலீசில் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தனர்.