உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காசநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம்

காசநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம்

புதுச்சேரி : தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் காசநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. கிராமப்புற செவிலியர் நிஷாந்தினி வரவேற்றார். செவிலியர் அதிகாரி ஜமுனா, கிராமப்புற செவிலியர் கலாவதி , சுகாதார உதவி ஆய்வாளர் ஜவகர் முன்னிலை வகித்தனர். நிலைய மருத்துவ அதிகாரிகள் அஸ்மா, மீனு ஆகியோர் தலைமை தாங்கி, தடுப்பூசி செலுத்தும் முகாமை துவக்கி வைத்தனர். இந்த தடுப்பூசியினை 60 வயதுக்கு மேல் உள்ள பெரியவர்கள், கடந்த 5 ஆண்டுகளாக காசநோய் சிகிச்சை எடுத்தவர்கள், 18 வயது நிரம்பியவர்கள் தடுப்பூசியினை செலுத்தி கொள்ளலாம். இதில், பொதுமக்கள், மருத்துவமனை ஊழியர்கள், ஆஷா பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். செவிலியர் அதிகாரி வேதநாயகி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை