உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஒரே காருக்கு உரிமை கொண்டாடிய 2 பேர் 

ஒரே காருக்கு உரிமை கொண்டாடிய 2 பேர் 

கடலுார்: கேட்பாரற்று நின்ற காருக்கு 2 பேர் உரிமை கொண்டாடியதால் போலீசார், காரை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தினர்.  கடலுார், புதுப்பாளையம் மெயின்ரோட்டில் நேற்று மாருதி கார் கேட்பாரற்று நின்று கொண்டிருந்தது. தகவலறிந்த புதுநகர் போலீசார், காரை பறிமுதல் செய்து, காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்தனர்.  இதையடுத்து காருக்கு உரிமை கொண்டாடி கடலுார், புதுப்பாளையம் ராகவி, கோண்டூர் அருண்குமார் ஆகியோர் தனித்தனியே ஆவணங்களை கொண்டு வந்தனர். ஆனால், ஆவணங்களில் அவர்கள் பெயர் இல்லாததால் யாரிடம் காரை ஒப்படைப்பதில் என்பதில் போலீசாருக்கு குழப்பம் நிலவியது. இதனால், போலீசார் யாரிடமும் காரை ஒப்படைக்கவில்லை. இச்சம்பவம் தொடர்பாக புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.  காருக்கு உரிமை கொண்டாடுவது தொடர்பாக 2 பேரும், கோர்ட்டிற்கு சென்று தீர்வு காணுமாறு போலீசார் அறிவுறுத்தினர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை