வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நன்றி
புதுச்சேரி : மாசிமக தீர்த்தவாரியை முன்னிட்டு, புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. புதுச்சேரியில் வரும் 14ம் தேதி 123ம் ஆண்டு மாசிமக திருவிழா நடக்கிறது. இதை முன்னிட்டு புதுச்சேரி வைத்திக்குப்பம், திருக்காஞ்சி பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பல்வேறு கோவில்களில் இருந்து உற்சவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு தீர்த்தவாரி நடக்கும். விழாவில், மயிலம் முருகன், செஞ்சி ரங்கநாதர், தீவனுார் பொய்யாமொழி விநாயகர், திண்டிவனம் நல்லிய கோடான் நகர் சீனிவாசபெருமாள் கோவில் சுவாமிகள் தீர்த்தவாரியில் பங்கேற்கும். விழாவில் புதுச்சேரி நகரம், கிராமப்புறத்தில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொள்வர். விழாவையொட்டி, வைத்திக்குப்பம் கடற்கரையோரத்தில் மணல் பரப்பை பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. பக்தர்களின் வசதிக்காக குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.
நன்றி