உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கிருமாம்பாக்கத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

கிருமாம்பாக்கத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

பாகூர்: மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அரியாங்குப்பம் திட்டம் 3 சார்பில், குழந்தைகளின் முன்பருவ கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், வித்யாரம்பம் நிகழ்ச்சி கிருமாம்பாக்கத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு, அங்கன்வாடி ஊழியர் கலைச்செல்வி வரவேற்றார். லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, நிகழ்ச்சியை துவக்கி வைத்து, கல்வி மற்றும் ஊட்டசத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.நலத்திட்ட அதிகாரி நிர்மலா தேவி முன்னிலை வகித்தார். கிருமாம்பாக்கம் அரசு மருத்துவமனை டாக்டர் தமிழ்செல்வி பிரியதர்ஷினி ''ஊட்டசத்து குறித்து பேசி, தாய்மார்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.குழந்தைகள் நெல் மணியில் அ எழுத்தை எழுதி தங்களின் முன்பருவ கல் வியை துவங்கினர். நிகழ்ச்சியை புனிதா ஒருங்கிணைத்தார். வரலட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை