உழவர் சந்தையாக மாறியது வில்லியனுார் மாட வீதி போக்குவரத்து நெரிசலால் அவதி
வில்லியனுார்: வில்லியனுார் மாட வீதியில் சாலையோர கடைகள் ஆக்கிரமிப்பால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.வில்லியனுார், புதுச்சேரிக்கு அடுத்தப்படியாக வளர்ந்துவரும் நகராக உள்ளது. அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்றவகையில் விலாசமான மார்க்கெட் வசதி இல்லாமல் சாலையிலேயே காய்கறி, பூ உள்ளிட்ட கடைகள் வைத்துள்ளனர்.இதனால் மாலை நேரங்களில் உழவர் சந்தையாக மாறி வரும் வில்லியனுார் மாடவீதியில், வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி வில்லியனுார் மாட வீதிகள் மற்றும் நகர பகுதியில் உள்ள நடைபாதை கடைகளை அகற்றி, சிறு வியாபாரிகளை ஒருங்கிணைத்து ஆரியப்பாளையம் பைபாஸ் சாலைக்கு கிழக்கே உள்ள பழைய விழுப்புரம் சாலை பகுதி அல்லது தற்போது மார்க்கெட் கமிட்டி குத்தகை எடுத்துள்ள கோட்டைமேடு சாமியார் தோப்பு இடங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் உழவர் சந்தை திறந்து நடைபாதை காய்கறி உள்ளிட்ட கடைகளை வைத்துக்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் மாட வீதிகளில் சாலையை ஆக்கிரமித்து மற்ற வாகனங்கள் செல்லாத வகையில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து போக்குவரத்தை சரி செய்ய வேண்டும்.