உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாரதிதாசன் கல்லுாரியில் கண்தான விழிப்புணர்வு

பாரதிதாசன் கல்லுாரியில் கண்தான விழிப்புணர்வு

புதுச்சேரி: பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி மற்றும் புதுச்சேரி சஷம் ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி ஒயிட் டவுன் இணைந்து, கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.தேசிய இருவார கண்தான விழிப்புணர்வு விழாவையொட்டி, முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில் சவுரிராஜ் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் வீரமோகன் தலைமை தாங்கினார். ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி தலைவர் ஆனந்தன் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினர்களாக, ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி கவர்னர் மேரி ஸ்டெல்லா, கேசவலு ஆகியோர் பங்கேற்று பேசினர். பேராசிரியர் ஆரோக்கியமேரி வாழ்த்துரை வழங்கினார்.கண்தானம் பற்றி மருத்துவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில், ரவி, ராம்குமார், விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் மணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ