உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருக்கல்யாண உற்சவம் 

திருக்கல்யாண உற்சவம் 

புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் சொர்ணமுத்து மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவையொட்டி, மீனாட்சி– சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கல்யாண உற்சவம் இன்று நடக்கிறது.  ரெட்டியார்பாளையம், புதுநகர், சொர்ணமுத்து மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த 19ம் தேதி துவங்கியது. இதையொட்டி, அன்று மாலை  கணபதி ஹோமம், அபிேஷக ஆராதனை நடந்தது. 20ம் தேதி காலை சிறப்பு அபிேஷக ஆதராதனையும், ஜெயா நகரில் இருந்து குதிரை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, மாலை ஐயனாரப்பனுக்கு ஊரணி பொங்கல் நடந்தது.  நேற்று மாலை சொர்ணமுத்து மாரியம்மனுக்கு 108 விளக்கு பூஜை நடந்தது. அதில், திரளான பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.  முக்கிய நிகழ்வாக இன்று(22ம் தேதி) மாலை 6 மணிக்கு மீனாட்சி– சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. நாளை (23ம் தேதி) காலை 8 மணிக்கு தேரோட்டமும், 24ம் தேதி காலை 9 மணிக்கு சக்திகரகம் புறப்பாடு, மதியம் 1 மணிக்கு சாகை வார்த்தல், இரவு 7:30 மணிக்கு கும்பம் கொட்டுதல் நடக்கிறது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை