மேலும் செய்திகள்
புதிதாக சேர்ந்த சமையலர் 75,000 ரூபாயுடன் ஓட்டம்
27-Jan-2025
புதுச்சேரி: புதுச்சேரி, சண்முகாபுரம், மங்களலட்சுமி நகரை சேர்ந்தவர் ஆனந்த், 49; எல்.ஐ.சி., முகவர்.இவரது மனைவி சிவப்பிரியா, 45; 2 மகன்கள் உள்ளனர்.கடந்த 19ம் தேதி ஆனந்த், சிவப்பிரியா இடையே குடும்ப வரவு, செலவு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதில், கோபமடைந்த சிவப்பிரியா வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால், இதுவரையில் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, ஆனந்த் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து ஆனந்த் அளித்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
27-Jan-2025