உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பூங்காக்களில் உடற்பயிற்சி கருவிகள், யோகா மையம் அமைக்கப்படுமா?

பூங்காக்களில் உடற்பயிற்சி கருவிகள், யோகா மையம் அமைக்கப்படுமா?

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அனைத்து பூங்காக்களிலும் உடற்பயிற்சி கருவிகள், யோகா மையம் அமைக்க வேண்டும். வாகன நெரிசல் புகையிலும், பணி அழுத்தங்களுக்கு மத்தியிலும் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும் புதுச்சேரி வாசிகள் பெரும்பாலானோருக்கு பூங்காக்கள் தான் கைகொடுத்து வருகிறது. தங்களது வீடுகளுக்கு அருகில் பூங்காக்களில் காலை மாலை வேளைகளில் உடல் நலனை பேண நடை பயிற்சி செய்கின்றனர்.ஆனால் பூங்காக்களில் நடை பயிற்சியோடு அனைத்தும் முடிந்து விடுகிறது என்ற ஏக்கம் பலரிடம் உள்ளது. தமிழகத்தில் சென்னையின் பல பூங்காக்களின் உடற்பயிற்சி கருவிகளும், யோகா மையங்களும் அமைக்கப்பட்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டன.ஆனால் புதுச்சேரி பூங்காக்கள் ஆதிகால கட்டடமைப்பில் இன்னும் உள்ளது. புதுச்சேரியில் உள்ள பூங்காக்களில் உடற்பயிற்சி மையங்கள், யோகா மையங்கள் ஏற்படுத்த போதுமான இடம் இருந்தும் ஏனோ ஆர்வம் காட்டப்படாமல் உள்ளது. தமிழகத்தினை போன்று புதுச்சேரி பூங்காக்களில் உடற் பயிற்சி கருவிகள், யோகா மையங்கள் ஏற்படுத்தினால், பொதுமக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இது குறித்து நடை பயிற்சி மேற்கொள்ளுபவர்கள் கூறும்போது, புதுச்சேரியில் வெங்கட்டா நகர் சிறுவர் பூங்காவில் மட்டுமே நவீன உடற்பயிற்சி கருவிகள் உள்ளன. இது பொதுமக்களுக்கு உதவியாக உள்ளது. சிறிது நேரம் வாக்கிங்; சிறிது நேரம் உடற் பயிற்சி செய்துவிட்டு செல்கின்றனர். இதுபோன்று அனைத்து பூங்காக்களில் இதனை ஏற்படுத்த வேண்டும்.யோகா மன நலத்திற்கு மிகவும் முக்கியமானது. மத்திய அரசும் யோகாவிற்கு முக்கியத்துவம் கொடுக்க அறிவுறுத்தியுள்ள சூழ்நிலையில், பூங்காக்களில் யோகா மையங்கள் ஏற்படுத்துவது சிறந்ததாக இருக்கும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை