காப்பகத்தில் தங்கியிருந்த பெண் சாவு
அரியாங்குப்பம்: காப்பகத்தில் தங்கியிருந்த பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். சிதம்பரம் கஞ்சி தொட்டி பகுதியை சேர்ந்தவர் சுந்தரி, 46; மனநிலை சரியில்லாத இவர், அரியாங்குப்பம் தனியார் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு தங்கியிருந்தார். கடந்த 5ம் தேதி, உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.