உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் நாளை பெண்கள் பங்கேற்கும்வாக்கத்தான் போட்டி

புதுச்சேரியில் நாளை பெண்கள் பங்கேற்கும்வாக்கத்தான் போட்டி

புதுச்சேரி : புதுச்சேரியில் பெண்கள் மட்டும் பங்கேற்கும் 'வாக்கத்தான்' போட்டி நாளை 9ம் தேதி நடக்கிறது. புதுச்சேரி கோல்டு பிரியம் சன் பிளவர் ஆயில் மற்றும் சுப்ரீம் மீடியா விளம்பர நிறுவனம் இணைந்து மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்காக 'வாக்கத்தான்' போட்டியை உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில், நாளை காலை 6:00 மணிக்கு நடத்துகின்றன.சுப்ரீம் மீடியா ஹவுஸ் நிர்வாக இயக்குனர் ஞானவேல் கூறுகையில், 'பெண்களின் உடல், மனம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அவர்களின் தினசரி பணிகளில் இருந்து சற்று விலக்கி, தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், 'வாக்கத்தான்' (மெகா வேக நடை போட்டி) நடத்தி வருகிறோம். 6வது ஆண்டாக, இப்போட்டி நடக்கிறது. போட்டியில், பங்கேற்க நேற்றுடன் முன்பதிவு முடிந்த நிலையில், பெண்கள் கேட்டு கொண்டதன்பேரில், இன்று 8ம் தேதி, மாலை 3:00 மணி முதல் 7:00 மணி வரை முன்பதிவு செய்யப்படுகிறது. 18 வயது முதல், 61 வயது வரை உள்ள பெண்கள் கலந்து கொள்ளலாம். 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்படுகிறது. வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 90431 01030 மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !