உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆற்றில்  மூழ்கி தொழிலாளி பலி

ஆற்றில்  மூழ்கி தொழிலாளி பலி

 : அரியாங்குப்பம்: நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் ரிக் ஷா ஓட்டும் தொழிலாளி தண்ணீரில் மூழ்கி இறந்தார். கடலுார் சாலை நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் ஆண் சடலம் மிதப்பதாக தவளக்குப்பம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார்  மற்றும் போலீசார் ஆற்றில் மிதந்து கிடந்த சடலத்தை கைப்பற்றி, இந்திராகாந்தி அரசு மருத்துக்கல்லுாரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் விசாரணை செய்ததில், புதுச்சேரி ஒதியஞ்சாலை அருகில் உள்ள வெங்கடாஜலபதி வீதியை சேர்ந்த கார்த்திகேயன், 48; என்பதும், இவர் ரிக் ஷா ஓட்டி வந்தது தெரியவந்தது. ஆற்றில் மட்டி கல்லி பிடிக்கும் போது தண்ணீரில் மூழ்கி இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.    


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை