மேலும் செய்திகள்
மரக்கன்றுகள் நடும் பணி
23-May-2026
புதுச்சேரி: புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் சார்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு துறை இயக்குநர் ஜெய்சங்கர் தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நட்டு, துவக்கி வைத்தார். இதில் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, சப்போட்டா, ஆப்பிள், செந்நெல்லி, மா மற்றும் பல்வேறு வகையான பூ மற்றும் பழ மரக்கன்றுகள் நடப்பட்டன.
23-May-2026