மேலும் செய்திகள்
கத்தியுடன் சுற்றிய வாலிபர் கைது
01-Feb-2025
புதுச்சேரி : கத்தியுடன் திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.உருளையான்பேட் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மணிமொழி மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். உருளையான்பேட் அய்யனார் கோவில் வீதியில் வாலிபர் ஒருவர் கையில் கத்தியுடன் திரிந்தார். அவர், போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றார்.அவரை போலீசார் மடக்கி, விசாரித்தனர். அவர் பெரியார் நகரைச் சேர்ந்த கேசவன், 28, என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
01-Feb-2025