மேலும் செய்திகள்
கத்தியை காட்டி மக்களை மிரட்டிய வாலிபர் கைது
10-Jun-2026
புதுச்சேரி: முன்விரோதம் காரணமாக எதிரியை கொலை செய்ய கத்தியுடன் திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருக்கனுார் அடுத்த விநாயகம்பட்டு, புத்து மாரியம்மன் கோவில் அருகே வாலிபர் ஒருவர் மதுபோதையில் கத்தியுடன் திரிந்து கொண்டிருந்தார். தகவலறிந்த திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று, அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் செல்லிப்பட்டு, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அய்யப்பன் மகன் தமிழ் (எ) தமிழரசன், 22; என்பதும், முன்விரோதம் காரணமாக விநாயகம்பட்டு அருகேயுள்ள தமிழகப் பகுதியை சேர்ந்த ஒருவரை கொலை செய்ய கத்தியுடன் திரிந்ததும் தெரிய வந்தது. அவர் வைத்திருந்த 2 கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் மீது போலீசார் வழக்கு பதிந்து, தமிழரசனை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
10-Jun-2026