உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கஞ்சா கடந்திய வாலிபர் கைது

கஞ்சா கடந்திய வாலிபர் கைது

புதுச்சேரி: பைக்கில், கஞ்சா கடத்தி வந்த  வாலிபரை போலீசார் கைது செய்தனர். உருளையன்பேட்டை உதவி சப் இன்ஸ்பெக்டர் பிரதாபன் தலைமையிலான போலீசார் நவீனா கார்டன், சாத்தானி வீதியில் உள்ள தனியார் கெஸ்ட் அவுஸ் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டடிருந்தனர். அப்போது, ராயல் என்பீல்டு பைக்கில் (பிஒய்.01.சிஎல்.1908) வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் பைக்கில் கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் விசாரணை செய்ததில், பைக்கில் வந்த வாலிபர், புதுசாரம் பகுதியை சேர்ந்த பிரசாந்த்குமார், 21,   என்பதும், அவர் குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கி அதிக விலைக்கு விற்க கடத்தி வந்ததும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், பைக், மொபைல் போன், 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ