உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கத்தியை காட்டி மக்களை மிரட்டிய வாலிபர் கைது

கத்தியை காட்டி மக்களை மிரட்டிய வாலிபர் கைது

புதுச்சேரி: கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். டி.நகர் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்துப்பணியில் இருந்தனர். அப்போது, தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அருகே கத்தியுடன் ஒரு வாலிபர் பொதுமக்களை மிரட்டி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை கண்டதும் அவர் தப்பிக்க முயன்றார். அவரை மடக்கி பிடித்து விசாரித்ததில் லாஸ்பேட்டை பாலராமன் மகன் ராஜ்குமார், 25, என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிந்து, கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்த கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !