மேலும் செய்திகள்
பொது இடத்தில் ரகளை 4 பேர் கைது
22-Jun-2026
பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். பாகூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, சோரியாங்குப்பம் வி.ஜ.பி. நகர் அருகே வாலிபர் ஒருவர் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக திட்டி ரகளையில் ஈடுபட்டார். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில்‘ நடுவீரப்பட்டு அடுத்த சூரியன்பேட்டை பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் 30; என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல், கரையாம்புத்துார் அடுத்துள்ள மணமேடு ஏரிக்கரை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட கடலுார் மாவட்டம் குட்டியாங்குப்பத்தை சேர்ந்த பிரதீப்ராஜ் 27; என்பவரை போலீசார் கைது செய்தனர்.
22-Jun-2026