உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வில்லியனுார் அருகே சூதாடிய 10 பேர் கைது

வில்லியனுார் அருகே சூதாடிய 10 பேர் கைது

வில்லியனுார்: வில்லியனுார் அருகே காசு வைத்து சூதாடிய 10 பேரை போலீசார் கைது செய்தனர். வில்லியனுார் அடுத்த ஒதியம்பட்டு தனியார் தொழிற்சாலை பின்புறத்தில் பணம் வைத்து சூதாடு வதாக வில்லியனுார் போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசாரை கண்டு தப்பி யோட முயன்றவர்க ளை மடக்கி விசாரித்தனர். வில்லியனுார் சிலம்பரசன், 38; ஜெயசுதா, 40; புஷ்பராஜ், 37; நிஜந்தன், 27; வேல்முருகன், 43; கொம்பாக்கம் ரியாஸ், 27; ஒதியம்பட்டு பாலமுருகன், 40; பெரியபேட் ஜேகதீஷ் ஆகியோர் என தெரியவந்தது. அவர்கள் 10 பேர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 31 ஆயிரம் ரொக்கம், 3 பைக்குகள், 8 மொபைல் போன்கள் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை