10 சவரன் நகை திருட்டு போலீஸ் விசாரணை
புதுச்சேரி: பஸ் கூட்ட நெரிசலில் 10 சவரன் தங்க ஜெயினை திருடியவர் போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி கலிதீர்தாள்குப்பத்தை சேர்ந்தவர் ராஜகுமாரி, 55, இவர், கடந்த 3ம் தேதி அரியாங்குப்பத்தில் நடந்த உறவினர் திருமணத்திற்கு சென்று, மாலை நெல்லித்தோப்பு பஸ் நிறுத்தத்தில் தனியார் பஸ்சில் கலிதீர்தாள்குப்பம் நோக்கி வந்தார். அப்போது பஸ்சில் ஏறிய பெண் ஒருவர் ராஜகுமாரியிடம் நீங்கள் அணிந்துள்ள நகை அறுந்து கீழே விழுவது போல் உள்ளது என கூறியுள்ளார். இதையடுத்து ராஜகுமாரி அவர் அணிந்திருந்த தங்க செயினை கழற்றி அவரது பேக்கில் வைத்தார். பின்ல,. வில்லியனுார் கோட்டைமேடு வந்த போது அவர் பேக்கில் வைத்திருந்த 10 சவரன் செயினை காணவில்லை.இதுகுறித்து ராஜகுமாரி கொடுத்த புகாரில், வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.