உள்ளூர் செய்திகள்

1008 சங்காபிேஷம்

காரைக்கால்: சிவன் கோவில்களில் கார்த்திகை மாத சோமவார திங்கள் கிழமைகளில் விஷேச பூஜைகள் நடைபெறுவது வழக்கம். நேற்று கார்த்திகை சோமவார நிறைவையொட்டி முன்னிட்டு காரைக்கால், திருநள்ளார் தர்பாரண்யேஸ்வர் கோவிலில் 1008 சங்கு அபிஷேகம் நடந்தது. முன்னதாக சிறப்பு ஹோமம் அதனை தொடர்ந்து பால்,தயிர்,மஞ்சள்,சந்தனம் உள்ளிட்ட திரவியங்களினால் சிவனுக்கு அபிஷேகம் நடந்தது. புனித நீர் அடங்கிய கலசம் மற்றும் வலம்புரி சங்குகளை சிவாச்சாரியார்கள் ஏந்தி ஆலயத்தை வலம் வந்து கலசம் மற்றும் சங்குகளிலிருந்த புனித நீரினால் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர் சிவன் மற்றும் சனீஸ்வரபகாவனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. இந்நிழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை