உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  108 பால்குடம் ஊர்வலம்

 108 பால்குடம் ஊர்வலம்

புதுச்சேரி: தைப்பூச விழாவையொட்டி சுப்பிரமணிய சுவாமிக்கு 108 பால்குடம் அபிஷேகம் நடந்தது. புதுச்சேரி, சாரம் முத்துவிநாயகர், வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி, நாகமுத்து மாரியம்மன் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி பக்தர்கள் 108 பால்குடங்களுடன் சாரம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து, சுப்பிரமணிய சுவாமிக்கு 108 பால்குடம் அபிஷகேம் நந்தது. இதில் பக்கதர்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர், மதியம் அன்னதானமும், அதனைத் தொடர்ந்து, மாலை கோவிலில் சுவாமி உள்புறப்பாடு நடந்தது. விழா ஏற்பாட்டினை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ