அன்னை ரயில் நிலையம் வந்த 111வது நினைவு தினம்
புதுச்சேரி: புதுச்சேரி நபத்வீப் தாம் பங்கவானி அறக்கட்டளை, உலக அமைதி அறக்கட்டளை சார்பில் ரயில் நிலையத்திற்கு அன்னை வந்ததன் 111வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமைச்சர் லட்சுமிநாராயணன் அவரது படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார்.புதுச்சேரி நபத்வீப் தாம் பங்கவானி அறக்கட்டளை, உலக அமைதி அறக்கட்டளை சார்பில் ரயில் நிலையத்திற்கு அன்னை வந்த 111வது ஆண்டு நினைவு தினம் நேற்று நடந்தது. புதுச்சேரியில் அரவிந்தரை அவரது ஆசிரமத்தில் சந்திக்க, அன்னை கடந்த 1914ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி முதல் முறையாக புதுச்சேரி ரயில் நிலையத்திற்கு வந்தார். இதையொட்டி, புதுச்சேரி நபத்வீப் தாம் பங்கவானி அறக்கட்டளை, உலக அமைதி அறக்கட்டளை சார்பில் அன்னை ரயில் நிலையத்திற்கு வந்த 111வது ஆண்டு நினைவு தினம் நேற்று கொண்டாடப்பட்டது.புதுச்சேரி ரயில் நிலைய பிளாட்பாரத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அன்னையின் உருவப்படத்திற்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் மலர்துாவி மரியாதை செலுத்தினார். இதில், ஒருங்கிணைப்பாளர் திப்யேந்து கோஸ்வாமி, புத்தக சங்க இயக்குனர் முருகன் கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.